எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்

 
ராகுல் காந்தி

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image


நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இருப்பினும்  தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

அதற்காக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்திவருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்பாரா? அல்லது மூத்த தலைவர்கள் யாரேனும் தேர்வு செய்யப்படுவார்களா? என கேள்வி எழுந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் பதவி அந்தஸ்துக்கு இணையானதாகும். தேர்தல் ஆணையர் தேர்வு, ஊழல் கண்காணிப்பு ஆணையர் தேர்வு உள்ளிட்டவற்றில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது குறிப்பிடதக்கது.