அன்று பிரதமர் மோடி... இன்று மினிஸ்டரி அக்கவுண்ட் - கைவரிசை காட்டும் ஹேக்கர்கள்!

 
மோடி

இந்தியாவில் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது. அதற்கான முன்னெடுப்புகளையும் செய்து வருகிறது. ஆனால் அதற்கு ஊறு விளைவிக்கும் விதமாக அரசு துறைகளின் ட்விட்டர் கணக்குகளையே ஹேக்கர்கள் ஹேக் செய்கின்றனர். ட்விட்டர் கணக்கையே ஒரு அரசால் ஹேக் செய்வதிலிருந்து தடுக்க முடியவில்லை. பல கோடிக்கணக்கான இந்தியர்களின் தரவுகள் அடங்கிய அரசு துறைகளின் வலைதளங்களை எப்படி பாதுகாக்க போகிறீர்கள் என மத்திய அரசை நோக்கி கேள்வி எழுந்துள்ளது.

IB ministry twitter

கடந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி நள்ளிரவில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கையே ஹேக்கர்கள் ஹேக் செய்தனர். அவ்வாறு ஹேக் செய்த பின்னர், இந்தியா பிட்காயினை அங்கீகரித்துவிட்டதாக போலியான பதிவையும் பதிவிட்டிருந்தனர். உடனே பிரதமர் அலுவலகம் விளக்கம் தெரிவித்தது. கணக்கு மீட்கப்பட்டதாகவும் தகவல் கூறியது. அதேபோல கடந்த ஜனவரி 3 அன்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு (IMA), உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில் (Indian Council of World Affairs),  மகிலா வங்கி (Mann Deshi Mahila Bank) ஆகியவற்றின் ட்விட்டர் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டன. 

தற்போது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் ( Ministry of Information and Broadcasting) ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இன்று காலை இந்த அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதில் Elon Musk என்ற பெயரை மாற்றப்பட்டுள்ளது. எலான் மஸ்க் என்பவர் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர். இந்தியாவில் யாருடைய கணக்குகளை ஹேக் செய்தாலும் அவரின் பெயரை தான் மாற்றுகின்றனர் ஹேக்கர்கள். இதையடுத்து சிறிது நேரத்திலேயே ட்விட்டர் கணக்கை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மீட்டது. 
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/union-ib-ministry-twitter-account-hacked-445207.html?story=1