விமானங்களில் கட்டணம் உயர்வு- இண்டிகோ அறிவிப்பு

 
indigo

நாளை முதல் புதிய எரிபொருள் கட்டணம் அமல் காரணமாக இண்டிகோ விமானங்களில் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றி வரும் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவிற்கு கப்பல்களின் வருகை தடைப்பட்டுள்ளது. இதனால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட துவங்கியுள்ளது. நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு நகரங்களில் உணவகங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனிடையே எல்பிஜி தட்டுப்பாடு போல பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட கூடும் என அஞ்சி பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பொது மக்கள் படையெடுத்து தங்களது வாகனங்களுக்கு தேவைக்கு அதிகமாக எரிபொருள் நிரப்புகின்றனர். 

இந்நிலையில் நாளை முதல் புதிய எரிபொருள் கட்டணம் அமல் காரணமாக இண்டிகோ விமானங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய உள்நாட்டுப் பயணத்திற்கு ரூ.425 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல ரூ.900 கூடுதல் கட்டணம், தென்கிழக்கு ஆசியா, சீனாவிற்கு ரூ.1,800 கூடுதல் கட்டணம், ஆப்பிரிக்கா, மேற்கு ஆசிய நாடுகளுக்கு ரூ.1,800 கூடுதல் கட்டணம், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ரூ.2,300 கூடுதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இண்டிகோ அறிவித்துள்ளது.