மீண்டும், மீண்டுமா?- இண்டிகோ விமானத்தின் எஞ்சின் பகுதி தீ பிடித்ததால் பரபரப்பு
குஜராத், அகமதாபாத்தில் இருந்து கோவா புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தின் எஞ்சின் பகுதி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து டையூவுக்கு 60 பயணிகளுடன் செல்லவிருந்த இண்டிகோ விமானம் இன்று காலை புறப்படுவதை நிறுத்தியது. விமானம் புறப்படும் போது ஏற்பட்ட பிரச்சனையால், விமானிகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு "மேடே" அழைப்பு அனுப்பி உடனடியாக புறப்படுவதை நிறுத்தியதாக இண்டிகோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புறப்படுவதற்கு சற்று முன்பு விமானத்ததில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியபட்டது. சற்று நேரத்திலேயே இண்டிகோ விமானத்தின் எஞ்சின் பகுதி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்து 60 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது. பயணிகளின் டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது.


