#BREAKING இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது

 
TN

கிராமி விருது அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் ஒன்றாகும். 1951 முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்குகிறது.

Fusion band Shakti

இந்நிலையில்  இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு உயரிய 'கிராமி விருது' வழங்கப்பட்டுள்ளது.  இசைத்துறையின் மிக உயரிய விருதான 'கிராமி விருது' ஆல்பம் பிரிவில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் உசேன் அடங்கிய சக்தி இசைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. ஷக்தி குழுவின் ‘This moment’ ஆல்பத்திற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கிராமி விருது கிடைத்தது.