ஹெலிகாப்டர் விபத்து- உடல் சிதறி 3 பேர் பலி
Jan 5, 2025, 15:05 IST1736069721580
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் போர்பந்தர் பகுதியில் இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஏ.எல்.ஹெச். துருவ் ஹேலிகாப்டர் விபத்தில் சிக்கியது. வழக்கமான பயிற்சியின் போது கீழே விழுந்து விபத்து நடந்துள்ளது.
தரையிறங்க முயன்றபோது, ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு அருகில் விழுந்து நொறுங்கியது, தீ பற்றி எரிந்தது. ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பணியாளர்கள், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நான்கு மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் மற்றொரு பயங்கரமான விபத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.