ஒரேநாளில் 507 பேர் மரணம் ; மீண்டும் உயரும் கொரோனா பரவல்!

ஒரேநாளில் 507 பேர் மரணம் ; மீண்டும் உயரும் கொரோனா பரவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,383 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 507 பேர் மரணம் ; மீண்டும் உயரும் கொரோனா பரவல்!

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,57,720 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 507 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,18,987 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் 507 பேர் மரணம் ; மீண்டும் உயரும் கொரோனா பரவல்!

அத்துடன் இந்தியாவில் ஒரேநாளில் 38,652 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 3,04,29,339 பேர் கொரோனாவிலிருந்து குணமாகினர். அத்துடன் தற்போது 4,09,394 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து தப்பிக்கும் ஆயுதம் என்று சொல்லப்படும் தடுப்பூசி இந்தியாவில் 41,78,51,151 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.