இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா... அதிர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள்!!

 
corona

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.  இருப்பினும் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு என்பது வெகுவாக அதிகரித்து வருகிறது.

corona patient

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 37,379 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம்   27,553 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று தொற்று எண்ணிக்கை   33,750  ஆக பதிவானது. இந்த சூழலில் தினசரி கொரோனா பாதிப்பு 37ஆயிரத்தை தாண்டி மத்திய, மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

corona

இந்தியாவில் ஒரேநாளில் 11,007 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். நேற்று 9,249  பேர் குணமான நிலையில் இன்று கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இதுவரை 3,43,06,414 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.  இந்தியாவில் இதுவரை 4,82,017 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கொரோனாவால் 1,71,830 பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவை தடுக்கும் முக்கிய ஆயுதமாக சொல்லப்படும் தடுப்பூசியானது 1,46,70,18,464 பேருக்கு இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.