ஜெட் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் 1,79,723 பேருக்கு தொற்று உறுதி!!

 
corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona patient

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. ஒருபக்கம் கொரோனா மறுபக்கம் ஒமிக்ரான் பாதிப்பு ஆகியவை வேகமாக பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1,79,723 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 1,41,986 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று தொற்று எண்ணிக்கை 1,59,632 பேர் ஆக பதிவானது.  இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,57,07,727 ஆக உயர்ந்துள்ளது.

Corona

இந்தியாவில் ஒரேநாளில் 46,569 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து  இதுவரை குணமானோர் எண்ணிக்கை 3,45,00,172 ஆக அதிகரித்துள்ளது.
 கடந்த 24 மணிநேரத்தில்   146   பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.  அதன்படி இந்தியாவில் இதுவரை 4,83,936 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கொரோனாவால் 7,23,619பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவை தடுக்கும் முக்கிய ஆயுதமாக சொல்லப்படும் தடுப்பூசியானது 151.94 கோடி டோஸ்  செலுத்தப்பட்டுள்ளது.