‘தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வோம்’ - இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

அனைவரும் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக I.N.D.I.A கூட்டணியில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றிருப்பவர்களின் பட்டியல்
✦ கே.சி.வேணுகோபால் (காங்)
✦ சரத் பவார் (என்.சி.பி)
✦ மு.க.ஸ்டாலின் (தி.மு.க
✦ அபிஷேக் பானர்ஜி (டி.எம்.சி)
✦ சஞ்சய் ராவத் (சிவசேனா)
✦ தேஜஸ்வி யாதவ் (ஆர்.ஜே.டி)
✦ லல்லன் சிங் (ஜே.டி.யு)
✦ ராகவ் சத்தா (ஆம் ஆத்மி)
✦ ஹேமந்த் சோரன் (ஜே.எம்.எம்)
✦ ஜாதவ் அலிகான் (எஸ்.பி)
✦ டி.ராஜா (சி.பி.ஐ)
✦ உமர் அப்துல்லா (என்.சி)
✦ மெகபூபா முப்தி (பி.டி.பி)
இந்தியா கூட்டணி சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
✒ நாடாளுமன்றத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம்
✒ தொகுதி பங்கீடுகள் பொருத்தவரை அதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்பட்டு கூடிய விரைவில் முடிக்கப்படும்
✒ பொதுமக்கள் மீதான அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்தி எடுத்துரைக்க முடிவு
✒ தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மூலமாக பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க வேண்டும்
✒ தேர்தல் பிரச்சாரங்களை விரைவில் பல்வேறு மாநிலங்களில் எடுத்துச் செல்வது குறித்து தீர்மானம்
✒ முக்கியவத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக நாடு முழுவதும் விரைவில் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு