538 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கொரோனா பாதிப்பு!

 
corona

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 488  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 10 ஆயிரத்து 488  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று கணிசமாக குறைந்துள்ளது. இதன்மூலம் கடந்த 538 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது. இதில் கேரளாவில் மட்டும் 5 ஆயிரத்து 80 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

India Witnesses Sharp Drop in COVID Cases, Records 3.66 Lakh New Cases And  3,754 Deaths In Last 24 Hours

நாடு முழுவதும் 12 ஆயிரத்து 510 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டு 249 பேர் மரணித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 18 ஆயிரத்து 443 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் வீதம் 98.31 சதவீதமாக உள்ளது. 

Tamil Nadu: Covid-19 vaccination for 18-44 age group from May 20 | Cities  News,The Indian Express

இந்தியா முழுவதும் 116 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 39.8 கோடி பேர் முழுமையாக இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டுள்ளனர். இது இந்திய மக்கள்தொகையில் 28.9 சதவீதமாகும். 76.5 கோடி பேர் ஒரு டோஸ் மட்டுமே செலுத்திக்கொண்டுள்ளனர்.