‘இந்தியா மிகவும் அழகான நாடு’ - டெல்லியில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான ஜப்பான் பெண் ட்விட்டரில் பதிவு!

இந்தியா மிகவும் அழகான நாடு என டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது பாலியல் அத்துமீறலுக்கு ஆளான ஜப்பான் பெண்ணின் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுபதும் கடந்த 8ம் தேதி ஹோலி பண்டிகை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை பிறர் மீது ஊற்றியும் ஹோலி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில், தலைநகர் டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சேர்ந்து ஹோலி கொண்டாடினர்.
A Japanese woman was groped and molested in India on Holi festival day - the video is viral on Twitter.
— Rishabh Singla 🕊 (@Rishabh_Singla) March 11, 2023
Had they done this molestation on any other day, the crime would've been obvious - but not on Holi.#Japan #Girl #HoliMolestation #JapaneseWoman #HoliHooligans #Rape #Culture pic.twitter.com/ockpt48nD1
அப்போது, ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவரிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அவரது முகத்தில் வண்ணப்பொடியை பூசியும், தலையில் முட்டையை உடைத்தும், நீரை ஊற்றியும் அத்துமீறியும் நடந்துகொள்கின்றனர். அப்போது தன்னிடம் அத்துமீறிய ஒரு இளைஞனை அந்த இளம்பெண் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதனையடுத்து அந்தப் பெண் இந்தியாவில் இருந்து புறப்பட்டு, வங்கதேசம் சென்ற நிலையில் இது விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண்ணே இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜப்பானிய மொழியில் வெளியிட்டுள்ள அவரது பதிவில், “ நான் தான் அந்த வீடியோவை சமூகவலைதலத்தில் பதிவிட்டேன். ஆனால் வீடியோ வைரலானதால் அதை நீக்கிவிட்டேன். அந்த வீடியோவால் புண்படுத்தப்பட்ட நபர்களிடம் நாங்கள் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம். ஹோலி பண்டிகையின் போது பெண்கள் வெளியே ஆபத்து என கேள்விப்பட்டேன். நான் கும்பலால் அச்சுறுத்தப்பட்டு வண்ணப்பொடி வீசப்பட்டபோது என்னுடன் என் நண்பர்கள் 35 பேர் இருந்தனர்.
எனது ஜப்பானிய நண்பரால் அந்த வீடியோ எதிர்பாராத விதமாக எடுக்கப்பட்டுவிட்டது. ஹோலி பண்டிகை குறித்து எதிர்மறை எண்ணத்தை வெளிப்படுத்துவது நோக்கமல்ல. இந்தியாவின் கொண்டாட்டம் மற்றும் நேர்மறை எண்ணத்தை வெளிப்படுத்துவது என் நோக்கமாக இருந்தபோதும் பல்வேறு வழிகளில் கவலையை ஏற்படுத்தியதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். இந்தியா அற்புதமான நாடு... அதை நான் விரும்புகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றபோது இந்தியாவை நீங்கள் வெறுக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.