மும்பையில் ’இந்தியா’ கூட்டணியின் 2வது நாள் கூட்டம் தொடக்கம்!

 
india

மும்பையில் ’இந்தியா’ கூட்டணியின் இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முதல் 2 ஆலோசனை கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது.  இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு , தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் நடைபெற்று வருகிறது.

india

இந்த நிலையில், மும்பையில் ’இந்தியா’ கூட்டணியின் இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணிக்கான பிரத்யேக இலச்சினை இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. இதேபோல், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் இன்று ஆலோசிக்கப்படவுள்ளது.