உ.பி, மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை!!

 
rr

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  பாஜக கூட்டணி கட்சிகள் இந்திய அளவில் 292 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கூட்டணி 223 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  மற்ற கட்சிகள் 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. மொத்தம் 543 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்ற வருகின்றன.இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  இந்தியா கூட்டணி 41 இடங்களிலும் , பிஜேபி 36 இடங்களிலும் , மற்ற கூட்டணிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

modi and rahul

அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் நிதி இராணி பின்னடைவை சந்தித்துள்ளார்.  தபால் வாக்குகளில் அவர் முன்னிலையில் இருந்தாலும்,  அதன் பிறகான மூன்று சுற்று வாக்குகளின் எண்ணிக்கையில் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார் . கோவா மாநிலத்தின் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் தலா ஒரு இடங்களில் பாஜக , காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது . மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா முன்னிலை வகித்து வருகிறார் .

rahul gandhi

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 27 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 20 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது..