எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி முடிவு

 
ராகுல்

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இண்டியா கூட்டணி முடிவு செய்துள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது.

Image

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 292 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, திருமாவளாவன், சரத்பவார் சம்பாய் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக அரசமைக்க இந்தியா கூட்டணி முயற்சி செய்யாது என்றும் கூறப்படுகிறது. ஆட்சி அமைக்க முயற்சிப்பது தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிகிறது.

Image

இதனிடையே ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “சரியான நேரம் வரும்போது மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பாஜக அரசை அகற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்தியா கூட்டணி மோடி மற்றும் பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து போராடும்” என்றார்.