அதிகரிக்கும் கொரோனா : 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்..

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநில அரசு மாவட்ட வாரியாக தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் மெல்ல மெல்ல கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 6 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் அந்த மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவில் கடந்த மார்ச் 8-ந்தேதி வரை 2,082 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, மார்ச் 15-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்தில் 3,264 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநில அரசு மாவட்ட வாரியாக தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தேவையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கொரோனா பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட காய்ச்சல் பரவாலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.