வருமான வரி தாக்கல் செய்வோருக்கு மத்திய அரசின் அதிரடி குட் நியூஸ்
Dec 31, 2024, 14:55 IST1735637142168
2023-2024ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 15,2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கின் வழியாக மாதம் ஊதியம் பெறுவோரும், தொழிம் முனைவோரும், வருவாய் ஈட்டுவோரும் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மேல் பெறும் ஒவ்வொருவரும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி இந்தாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாக இருந்தது.
இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2024-25 ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. புதிய காலக்கெடு இப்போது ஜனவரி 15, 2025 க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.