குஜராத்தில் முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேலின் அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத்தில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதனால் முதல்வர் புபேந்திர பட்டேலிடம் 16 அமைச்சர்களும் தங்களது பதவி விலகல் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். 2027 இல் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்படும்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 22 அல்லது 23ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் ஆளுநரை முதல்வர் பூபேந்திர படேல் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. காந்தி நகரில் நாளை பதவியேற்க உள்ள புதிய அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு தர பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளது.


