88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!!

 
election

கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

vote

கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 67 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

முதல் கட்டமாக தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.  வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

vote

கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள் , மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள்,  மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள் , பீகார்,  அசாம் ஆகியவற்றில் தல 5  தொகுதிகள்,  மேற்குவங்கம் , சத்தீஸ்கர் ஆகியவற்றில் மூன்று தொகுதிகள்,  ஜம்மு காஷ்மீர் ,திரிபுரா ,மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது .

Vote

கேரளாவை பொறுத்தவரை 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகிறது.   இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே இங்கு நேரடி போட்டி நிலவுகிறது.  பாஜகவும் களத்தில் உள்ளது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனிராஜா , பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகின்றனர்.