பெற்றோரை புறக்கணித்தால் சம்பளம் பிடித்தம்! அரசு ஊழியருக்கு முதல்வர் எச்சரிக்கை

 
Revanth Reddy Revanth Reddy

பெற்றோரை புறக்கணித்தால் சம்பளம் பிடித்தம் செய்யும் சட்டத்தை இயற்ற தெலங்கானா முதல்வர் முடிவு செய்துள்ளார்.

Revanth Reddy: From farmer's son to Telangana CM


அரசு பணியாளர்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில்  10 - 15% வரை பிடித்தம் செய்யப்பட்டு, அது நேரடியாக பெற்றோர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். நீங்கள் மாத சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாத சம்பளம் பெறுவார்கள் எனவும் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். இதனை உறுதி செய்வதற்காக உயரதிகாரிகளின் மேற்பார்வையில் குழு அமைக்க அவர் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.