இதை செய்யாவிட்டால் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்

 
ச் ச்

பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேட்டியளித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “வாக்குகள் திருட்டு தொடர்பான ராகுல் காந்தி குற்றச்சாட்டு தொடர்பாக ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் பெறப்படாவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம். பீகார் வாக்காளர் பட்டியல் தொடர்பாக புகார் தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் உள்ளது. இதுவரை 28,370 புகார்களும், ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன. 7 கோடிக்கும் மேலான பீகார் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் நிற்கின்றனர். அங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். 


வாக்குகள் திருட்டு புகார் இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும். எதிர்க்கட்சிகளின் வாக்கு திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். போலியான புகார்களை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்களவை தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் நிலை முகவர்கள், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்காக பணியாற்றுகிறார். இவ்வளவு மக்கள் முன்னிலையில், எந்த வாக்களரும் வாக்குகளை திருட முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.