ஒருவர் சமூக விலகலை ஃபாலோ செய்யாவிட்டால் இத்தனை பேருக்கு கொரோனா பரவும்? – வெளியான ஷாக் தகவல்!

 

ஒருவர் சமூக விலகலை ஃபாலோ செய்யாவிட்டால் இத்தனை பேருக்கு கொரோனா பரவும்? – வெளியான ஷாக் தகவல்!

இந்தியா மீண்டும் ஒரு நெருக்கடியான மருத்துவப் பேரிடருக்குள் சிக்கியிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலை பரவல் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஒருவர் சமூக விலகலை ஃபாலோ செய்யாவிட்டால் இத்தனை பேருக்கு கொரோனா பரவும்? – வெளியான ஷாக் தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் 3.23 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் சமூகத்தில் ஒருவர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கா விட்டால் 30 நாட்களில் 406 பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லால் அகர்வால் கூறுகையில், “பல்வேறு பல்கலைக்கழங்கள் கொரோனா நோயாளிகள் குறித்து நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு கொரோனா நோயாளி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அடுத்த 30 நாட்களில் அவர் மூலம் 406 பேருக்கு தொற்று பரவும்.

ஒருவர் சமூக விலகலை ஃபாலோ செய்யாவிட்டால் இத்தனை பேருக்கு கொரோனா பரவும்? – வெளியான ஷாக் தகவல்!

அதேபோல 50 சதவீதம் கடைப்பிடித்தால் 15 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படும். மிகத்தீவிரமாக 100 சதவீதம் பின்பற்றினால் 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கொரோனா நோயாளியுடன் 6 அடி இடைவெளி விட்டு நின்று பேசினால் கூட தொற்று ஏற்படாதவர் பாதிக்கப்படலாம். வீட்டிலிருக்கும் கொரோனா நோயாளிகள் முறையாக முகக்கவசத்தை அணியாவிட்டால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட 90% வாய்ப்புள்ளது. தொற்றால் பாதிக்கப்படாத ஒருவர் முகக்கவசம் அணிந்து, முகக்கவசம் அணியாத கொரோனா நோயாளியுடன் பேசினால் 30 சதவீதம் பரவ வாய்ப்பு இருக்கிறது. இருவருமே முகக்கவசம் அணிந்திருந்தால் 1.5 சதவீதம் மட்டுமே தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது” என்றார்.