"பாஜக ஆட்சிக்குவந்தால் பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் வீடுகள் இடிக்கப்படும்"

 
pandit sanjay

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.

BJP's Telangana chief Bandi Sanjay arrested | Latest News India - Hindustan  Times


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக மகளிர் மோர்ச்சா கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் பண்டி சஞ்சய், “தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பாலியல் குற்றங்கள் கொலை போன்றவற்றில் ஈடுபடுபவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கப்படும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில், உத்தரபிரதேச முதல்வர் யோகி அரசு செயல்பாட்டை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படும்.  

பாஜக அரசு வந்த பிறகு பெண்களை இழிவாகப் பார்க்கக் கூடிய கும்பல் பயப்பட வேண்டும் .  தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ்ஸை விட பாஜக மகளிர் அணி பலமாக உள்ளது .
பிஆர்எஸ்க்கு மாற்றாக தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைக்கப் உள்ளது.  மதுபானம் கட்டுப்படுத்தப்படும்.  வரும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்.  இதுவரை கேசிஆர் செய்த வளர்ச்சி  குறித்து விவாதிக்க வேண்டும்” என பேசினார்.