இவர்தான் ரியல் Influencer... இணையவாசிகளை கவர்ந்த Gen Z இளைஞர்

 
s

Bittu_Tabahi என்று அறியப்படும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த Influencer ஒருவரின் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

மத்தியப் பிரதேசத்தில் அஜ்னார் நதியில் உள்ள குப்பைகள், கழிவுகளை தனி ஆளாக சுத்தம் செய்து அசத்தி அனைவர் கவனத்தையும் ஈர்த்த 20 வயதான சுரேந்திர சிங் என்ற Gen Z இளைஞர். இதற்காக முதலில் மெஷினை உருவாக்க நினைத்ததாகவும் பணம் இல்லாததால் வெறும் கைகளால் சுத்தம் செய்து, அதனால் தொற்று ஏற்பட்டதாகவும் கூறி உருக்கத்துடன் கூறிவருகிறார். “ஆரம்பத்தில் என்னை பைத்தியம் என கிண்டலடித்து, அவர்களின் கழிவுகளை நான் சுத்தம் செய்வதாகவும் கூறினர். அவர்களுக்கு என் செயலே பதில்” எனக்கூறி சிலிர்க்க விட்ட சுரேந்திர சிங்குக்கு இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. குப்பைகளால் மாசடைந்த ஆறுகளை ஒற்றை ஆளாக சுத்தம் செய்யும் இவரது முயற்சியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்; இவர் வெளியிடும் முன்பு - பின்பு காணொலிகள் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது