"பிளவை உண்டாக்க விரும்பவில்லை; யார் முதுகிலும் குத்த மாட்டேன்" - டி.கே. சிவகுமார்

 
tks

கர்நாடக காங்கிரசில் பிளவை உண்டாக்க நான் விரும்பவில்லை என்று டி.கே. சிவகுமார்  தெரிவித்துள்ளார். 

ttn

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக  வெற்றி பெற்றுள்ளது.  224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில்,  கடந்த 13ஆம் தேதி வாக்கு  எண்ணிக்கை நடந்தது . இதில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த நிலையில்,  135 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆளும் பாஜக 66 இடங்களையும்,  மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களையும்,  சுயேட்சைகள்  4 இடங்களையும் பிடித்துள்ளன.  இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அத்துடன் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சித்தராமையாவுக்கும் , மாநில தலைவர் டி.கே சிவகுமாருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இது குறித்த முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளார்.

DK Sivakumar

இந்நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பரபரப்பான சூழலில் டெல்லிக்கு புறப்படும் முன்பு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடக காங்கிரஸில் 135 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக உள்ளோம்.  பிளவை உண்டாக்க நான் விரும்பவில்லை . அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கவலையில்லை. நான் பொறுப்பான மனிதனாக தொடர்ந்து செயல்படுவேன். யாரையும் முதுகில் குத்தவும் மாட்டேன் மிரட்டவும் மாட்டேன். மிரட்டவும் மாட்டேன் என்றார்.