பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் : முதல்வர் பொம்மை நம்பிக்கை

 
tn

 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும்  பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இந்த சூழலில் ஹூப்ளி  உள்ள அனுமன் கோவிலில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சிறப்பு பூஜை செய்தார்.

ttn

இந்நிலையில் செய்தியளர்களை சந்தித்த அவர், " இன்று பாஜகவுக்கு மிகப்பெரிய நாள்.  கர்நாடக மக்களின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. பாஜக இறுதி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெறும் .மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடக்க அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"என்று கேட்டுக் கொண்டார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 224,  காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். பிற்பகலுக்குள்  பெரும்பாலான முடிவுகள் தெரியவரும் நிலையில்  224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.