"நான் உயிரோடுதான் இருக்கிறேன்" - நடிகை பூனம் பாண்டே

 
tn

நான்  உயிருடன் இருக்கிறேன். எனக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை என்று நடிகை பூனம் பாண்டே  தெரிவித்துள்ளார். 

tnபிரபல நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு நஷா என்னும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தனது அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விமர்சனங்களை சந்தித்து வந்தார்.  சர்ச்சைக்குரிய பாலிவுட் நடிகையாக வலம் வரும்  பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாகஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

tbஇந்நிலையில் நடிகை பூனம் பாண்டே இறந்ததாக கூறப்பட்ட நிலையில், நடிகை பூனம் பாண்டே இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே தவறான தகவலை பதிவிட்டதாக பூனம் பாண்டே விளக்கமளித்துள்ளார். மரணமடைந்ததாக கூறி உங்களை வருத்தத்தில் ஆழ்த்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.