ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போன விநாயகர் லட்டு

 
hyderabads-balapur-ganesh-laddu-fetches-rs-39-lakh-in-tradition-filled-annual-auction

ஐதராபாத் அருகே விநாயகர் லட்டு ஒன்று ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போனது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

என்டிடிவியில் சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்வது வழக்கம். பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளைப் பிரம்மாண்டமாக வைத்து அசத்துவார்கள். ஆனால் ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் சற்று வித்தியாச சம்பவம் ஒன்று நடைபெறும். அதாவது  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுகளை ஏலம் விடுவது வழக்கம். கடந்த  1994 ஆம் ஆண்டு லட்டு ஏலத்தில் விடும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 1994-ல், விவசாயி கோலன் மோகன் ரெட்டி 450 ரூபாய்க்கு லட்டை ஏலத்தில் வாங்கினார். இந்தப் பாரம்பரியம் 2002-ல் 1 லட்சம் ரூபாயையும், 2015-ல் 10 லட்சம் ரூபாயையும் கடந்தது. 2024-ல், ஏலத்தொகை 30.01 லட்சம் ரூபாயை எட்டியது. 2025-ல், கர்மாங்கட்டைச் சேர்ந்த லிங்கலா தசரத் கௌட் 35 லட்சம் ரூபாய் செலுத்தி லட்டை வாங்கி சென்றார்.

அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகருக்குப் படைக்கப்பட்ட லட்டு  ஏலம் விடப்பட்டது. 21 கிலோ எடை கொண்ட இந்த லட்டுவை ஏலத்தில் எடுக்கக் கடுமையான போட்டி நடைபெற்றது. கடைசியில் சமா பிரணீத் ரெட்டி  என்பவர், 39 லட்சம் ரூபாய்க்கு லட்டை ஏலம் எடுத்தார். பக்தர்களுக்கு, ஏலம் விடப்படும் இந்த லட்டு வெறும் இனிப்புப் பண்டம் மட்டுமல்ல. இது பிரசாதம், அதாவது ஒரு புனிதமான காணிக்கையாகக் கருதப்படுகிறது. பல ஏலதாரர்கள் இதை வீட்டிற்கு எடுத்துச் செல்வதை ஆசீர்வாதங்கள், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டமாக பார்க்கிறார்கள். ஏலத்தொகை ஆர்.வி. தியா அறக்கட்டளை மூலமான கல்வி மற்றும் சுகாதார ஆதரவு உள்ளிட்ட தொண்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.