விமர்சனத்துக்குள்ளான ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்! சீருடையில் காவலர்கள் ரொமான்ஸ்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாகுட்டா காவல் நிலையத்தில் நடந்த திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பு தற்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. போலீஸ் சிருடையில் பணியில் இருக்கும் இரண்டு போலீசார் வாகனத்தை பயன்படுத்தி போட்டோ எடுத்து கொண்டனர். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஆயுதப்படை எஸ்.ஐ. ஆக இருக்கும் ரவுரி கிஷோருக்கும் , பஞ்சாகுண்டா காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஆக பணி புரியும் பாவனாவுக்கும் ஆகஸ்ட் 26 அன்று திருமணம் நடைபெற்றது. இருப்பினும் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பு, தம்பதியினர் திருமண படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தனர்.
#Watch | Pre-wedding shoot of two #Hyderabad cops goes viral. pic.twitter.com/Lk0tiKiLnQ
— Deccan Chronicle (@DeccanChronicle) September 16, 2023
இதில் வருங்கால ஜோடி அந்த நேரத்தில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பில் நடத்தினர். ஆனால் படப்பிடிப்பின் ஆரம்பத்திலேயே மூன்று சிங்கங்களைக் காண்பித்து சினிமாவை மிஞ்சும் வகையில் இருவரும் போலீசாரின் வாகனங்களில் இருந்து இறங்குவது போன்று காவல் நிலைய வளாகத்தில் படப்பிடிப்பு எடுத்து கொண்டனர்.
போலீஸ் வாகனத்தில் சீருடையில் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருவரும் தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக நெட்டிசன்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.