ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்ட 1,265 கிலோ எடையுள்ள லட்டு
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து அயோத்தி ராமருக்கு மிகப்பெரிய லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் 22 ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கண்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் ஸ்ரீராம கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் நாகபூஷணம் ரெட்டி மற்றும் கிருஷ்ணகுமாரிக் தம்பதி ராமருக்கு லட்டு தயார் செய்து வழங்க முடிவு செய்தனர்.
இது தொடர்பாக ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பிரதிநிதி சம்பத்ராயை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அவரும் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி பூமி பூஜை முதல் ராமர் சிலை நிறுவப்படும் வரை 1,265 நாட்கள் ஆனது. இதனைக் குறிக்கும் வகையில் நாகபூஷணம் தம்பதி அதே எடை கொண்ட லட்டு தயாரித்து வழங்கும்படி தெரிவித்தார். இதனையடுத்து 1,265 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டை பிரத்யேகமாக தயாரித்தனர். அதை அயோத்திக்கு அனுப்ப அவரது வீட்டில் இருந்து பிரத்தியாக கண்ணாடி பேழையில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.