அட இப்படியா சாவு வரணும்! போலீசுக்கு பயந்ததால் பறிபோன உயிர்

ஐதராபாத்தில் பைக் ஓட்டி வந்தவருக்கு திடீரென நிறுத்தி போக்குவரத்து போலீசார் அபராத சலான் வழங்க முயன்ற நிலையில் பைக்கை நிறுத்த முயன்று சாலையில் கவிழ்ந்ததால் பஸ்சின் டயரில் சிக்கி தலை நசுங்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பாலாநகரில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராத சலான் வழங்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது பைக்கில் வந்த 35 வயதான போசுபாபு வந்தபோது போக்குவரத்து போலீசார் பைக்கை திடிரென பைக்கை துரத்தி சென்று நிறுத்த முயன்றனர். இதனால் நிலை தடுமாறிய பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அவர் பின்னாள் வந்த ஆர்.டி.சி.பஸ் போசுபாபு தலை மீது ஏறி இறங்கியதால் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார். போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் அந்த நபர் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டி, குடும்பத்தினர் சக வாகன ஓட்டிகள் ஆம்புலன்சில் ஏற்றி வைக்கப்பட்ட சடலத்துடன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு நீதி கேட்டு சாலையில் மறியல் செய்தனர்.
இதனால் பாலநகரில் இருந்து நர்சாபூர் செல்லும் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடும்பத்தினரை சமாதானப்படுத்த போலீசார் முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்த மறுத்ததால், போலீசார் போசுபாபு குடும்பத்தினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸை அனுப்பிய போலீசார், போக்குவரத்தை சரிசெய்து அனுப்பினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.