ஹைதராபாத்: பிரபல நகைக்கடையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை..!!
ஹைதராபாத் சந்தா நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் துப்பாக்கி சூடு நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் சந்தா நகரில் பிரபல நகைக்கடையான கசானா ஜுவல்லர்ஸ் அமைந்துள்ளது. இன்று காலை 10 மணி அளவில் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை திறந்த நிலையில், ஆறு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் காலை 10.30 மணி அளவில் கடைக்குள் நுழைந்துள்ளனர். துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகை கொள்ளையை தடுக்க முயன்றபோது காவலாளி மற்றும் கொள்ளையர்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாக தெரிகிறது.
கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த நகைக்கடை துணை மேலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிய கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவை நோக்கியும், துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் நகரில் பிரபல நகைக்கடைகள் பட்ட பகலில் துப்பாக்கி சூடு நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Daylight #Robbery in #Hyderabad .
— Surya Reddy (@jsuryareddy) August 12, 2025
CCTV footage shows: 5 armed #Robbers in masks barged into the Khazana Jewellery showroom in Chandanagar on Tuesday and looted gold ornaments within minutes after opening and fled the scene.#khazanajewellery #Chandanagar#hyderabadrobbery https://t.co/pqNVSpRgSF pic.twitter.com/KbMJg2dQ0L

