நாய் குரைத்ததால் உரிமையாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்
ஐதராபாத்தில் நாய் உரிமையாளரை கண் மூடி தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ரெஹ்மத் நகரில் ஸ்ரீநாத் - ஸ்வப்னா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் ஹஸ்கி ரக நாயை வளர்த்து வருகின்றனர். அவர்களது வீட்டின் எதிரே தனஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். ஸ்ரீநாத் வீட்டில் வளர்த்து வரும் நாய் தனஞ்சய் வீட்டிற்குள் சென்றது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் தனஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீநாத் அவரது மனைவி மற்றும் செல்ல நாயை கண்மூடிதனமாக கட்டையால் தாக்கினர். இதில் பலத்தகாயமடைந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீநாத் அளித்த புகாரை வைத்து மதுராநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தனஞ்சய், சாய்குமார், பிரவீன்குமார், கவுரிசங்கர், ராம்பாபு ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.