தந்தையின் கார் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி : பதறவைக்கும் சிசிடிவி காட்சி!!!

 
ttn

தந்தையின் கார் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ttn

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்பி நகர் மன்சூர்பாத் பகுதியை சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது காரை இயக்கியுள்ளார்.  அப்போது அவரது 4வயது  மகன் சாத்விக், தந்தையின் பின்னாடியே ஓடி வர அதை, லக்ஷ்மன் கவனிக்கவில்லை.  அவர் காருக்குள் ஏறி காரை இயக்க முற்பட்ட போது, குழந்தை சாத்விக், காருக்கு முன்பு ஓடி வந்துள்ளார். இதை கவனிக்காமல் தந்தை லக்ஷ்மன்  காரை இயக்க தொடங்கியபோது , எதிர்பாராதவிதமாக காரின் முன் பகுதியில் உள்ள சக்கரத்தில் அவரது மகன் சாத்விக் சிக்கியுள்ளார்.பெரும் கூச்சலுடன் குழந்தை அழுகை சத்தத்தை கேட்டு பதறி வந்த அவரது தந்தை லக்ஷ்மன் உடனடியாக படுகாயமடைந்த சிறுவன் சாத்விக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.