முடி வளர மூலிகை க்ரீம் தருவதாகக் கூறி 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மொட்டை அடித்து மோசடி! முடி வளராமல் கொப்பளம் வந்ததால் பரபரப்பு

ஹைதராபாத்தில் வெறும் ரூ.50க்கு மொட்டை அடித்து, மொட்டை தலை மற்றும் வழுக்கை தலையில் முடி வளர வைக்க ரூ.200 மூலிகை கீரிம் எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பழைய நகரத்தில் டெல்லியில் இருந்து வந்த வகில் சல்மாணி என்பவர் சலூன் ஆரம்பித்தார். பின்னர் தனது கடையை விளம்பரப்படுத்த வழுக்கைத் தலையில் தன்னிடம் உள்ள கிரீம் தடவினால் முடி வளரும் என்று கூறினார். இந்த வீடியோ சமூக வளைதளத்தில் பதிவு செய்தார். கீரிம் மூலம் வழக்கை தலையில் 8 நாட்களில் மீண்டும் முடி வளரும் என்று நம்பிக்கையுடன் கூறினார். அது உண்மை என்று நம்பிய மக்கள் ஐதராபாத்தின் பழைய நகரில் உள்ள வகில் சல்மாணி கடை முன்பு திரண்டனர். மேலும் வழக்கை தலையில் மொட்டையடிக்க மட்டும் ரூ.200 முடி வளர்க்கும் கிரீம் இலவசம், இலவசம், இலவசம் எனக்கூறினார்.
இதனால் அவர் கடையில் வரிசைக்கட்டி வந்தவர்களின் தலையை சுத்தமாக ஷேவ் செய்து தான் தயார் செய்ததாக கூறும் கெட்டியான க்ரீமைப் பூசினார். சல்மாணியிடம் கிரீம் தடவி கொண்டு முடி வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் வீட்டிற்குச் சென்றனர். வகில் சல்மானி சொன்னது போல் 8 நாட்கள் பொறுமையாகக் காத்திருந்தனர். 9-வது நாள் முடிந்து வளரவில்லை. வழுக்கைத் தலையில் அரிப்பு , கொப்பளங்கள் வந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை மிகவும் தாமதமாக உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் ஒருமுறை வந்தவர்கள் திரும்பி வராவிட்டாலும், புதியவர்கள் இன்னும் நம்பிக்கையுடன் வந்து மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நின்று வழுக்கை தலையில் கிளின் ஷேவ் செய்து கீரிம் தடவி கொண்டனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகமானதால் வகில் சல்மாணி கடை மூடி சென்றார். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்படாவிட்டாலும் போலீசார் தானாக முன்வந்து விசாரித்து வருகின்றனர்.