தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்வதை போன்று வீடியோ எடுத்து கிண்டல்... கடைசியில் பறிபோன உயிர்

 
s

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை மனைவி கோபத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்வதை வீடியோ எடுத்து கிண்டல் செய்த நிலையில் கீழே இறங்கும் போது புடவை கழுத்தில் சிக்கி இறந்த சம்பவம் கடப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Andhra: ఉరి అలా కాదు.. ఇలా వేసుకోవాలి అంటూ భార్యకు సూచనలు చేస్తూ...

 ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலம், போயினபள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ்  ரயில்வே லோகோ பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் வீட்டில் அவரது மனைவி கிருஷ்ணவேணியுடன் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.  தினமும் வழக்கமாக சண்டையிட்ட பிறகு இருவரும் சமாதானமாக இருப்பது வழக்கம். இந்தநிலையில்  இந்த கிருஷ்ணவேனி கணவரை மிரட்ட கட்டில் மீது சேரை வைத்து அதன் மீது ஏறி நின்று புடவையால் துக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக  கூறினார். மனைவியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை தடுக்காமல் விளையாட்டாக செல்போனில் வீடியோ எடுத்து கொண்டே  தூக்கில் தொங்க அப்படிச் செய்யக்கூடாது, இப்படிச் செய்ய வேண்டும் என்று கூறி வீடியோவை  பதிவு செய்தார். இதனால் கிருஷ்ணவேனி சேரில் இருந்து கீழே இறங்க முயன்றபோது புடவை அவரது கழுத்தை இறுக்கி   கொண்டதால் கணவர் கண்முன்னே கிருஷ்ணவேனி இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த போலீசார் கிருஷ்ணவேனியை  தூக்கில் தொங்கத் தூண்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணவேணியின் உறவினர்கள் அவரது மரணத்தால் கோபமடைந்து ஸ்ரீராமைத் தாக்க முயன்றனர், ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.