முதலிரவு நடக்கவில்லை என பெற்றோரிடம் கூறிய மனைவியை கொலை செய்த கணவர்

 
முதலிரவு

ஆந்திராவில் முதலிரவு நடக்காததை  பெற்றோருக்கு கூறி மருத்துவ மனையில் பரிசோதனை செய்ததால் மனைவி, மாமியாரை கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூர் சிந்தலமுனிநகரை  சேர்ந்த பிரசாத் மற்றும் கிருஷ்ணவேணி தம்பதியருக்கு ஷ்ரவன் என்ற மகன் உள்ளார். ஷ்ரவன்  பி.டெக் வரை படித்துவிட்டு கடந்த ஆண்டு வரை வார்டு தன்னார்வலராக பணியாற்றினார்.  பிறகு ஹைதராபாத்தில் தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இவரது தந்தை பிரசாத் இட்லி கடை நடத்தி குடும்பம் நடத்தி வந்தனர். 

இந்நிலையில்  தெலுங்கானா மாநிலம் வனபர்த்தியை சேர்ந்த வெங்கடேஷ்வர்லு, ரமாதேவி தம்பதியின் மகள் ருக்மணிக்கும், ஷ்ரவனுக்கும் கடந்த மார்ச் 1ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் குறித்து ஷ்ரவனின் பெற்றோர் அக்கம் பக்கத்தினரிடம் கூறாமல் திருமணத்தில் இரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலரே பங்கேற்றனர். திருமணத்திற்கு பிறகு  ருக்மணி தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். 

ஷ்ரவன் தனக்கு அலுவலகத்தில் வேலை இருப்பதாகச் கூறி  ருக்மணியை அவரது தாயார்  வீட்டிற்கு  அழைத்து சென்று விட்டு ஹைதராபாத் சென்றான். அப்போது முதல் மனைவி மீது சந்தேகம் அடைந்து பேச மறுத்து வந்தான். இந்நிலையில் வெங்கடேஸ்வரலு தம்பதியினர் தங்கள் மகளிடம் பேசியபோது திருமணம் நடந்த முதல் நாளிலிருந்தே ஷ்ரவண் தன்னை விட்டு விலகி இருப்பதாக கூறினார்.  இது தொடர்பாக வெங்கடேஸ்வரலு தனது சம்மந்தி பிரசாத்திற்கு போன் செய்து கேட்டனர்.

murder

பின்னர் ஷ்ரவனிடம் கேட்டப்போது தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததால் ருக்மணி தாயார்  ஹைதராபாத்தில் உள்ள பாலியல் மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டார்.   இந்த நிலையில் கடந்த 10ம் தேதி ஷ்ரவன் நடந்த விவரங்களை தனது தந்தை பிரசாத்திற்கு கூறி தற்கொலை முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் காப்பற்றினர்.

இந்நிலையில் தனது மகன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளிய வெங்கடேஸ்வரலு, ரமாதேவி ருக்மணி ஆகியோர் மீது  பிரசாத் கோபமடைந்தார்.  இதை மகனிடம் கூறி ருக்மணி அவரது பெற்றோரை கொல்ல திட்டமிட்டார். இதற்காக ஷ்ரவன், வனபர்த்திக்கு சென்று, மாமியார் வெங்கடேஸ்வரலு, ரமாதேவி, மனைவி ருக்மணி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கர்னூலுக்கு அழைத்து வந்தார்.  அவர்களை வீட்டின் முதல் மாடிக்கு அழைத்துச் சென்ற ருக்மணியை ஷ்ரவன் சரமாரியாக வெட்டிக் கொன்றார்.

இவரது தந்தை பிரசாத் ரமாதேவியையும்,  வெங்கடேஷ்வர்லுவை கத்தியால் தாக்கினார். இதில் ரமாதேவி  சுருண்டு விழுந்து அதே இடத்தில் இறந்தார்.  காயமடைந்த வெங்கடேஸ்வரலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் ஷ்ரவன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகினர். சம்பவ இடத்தை கர்னூல் டிஎஸ்பி கே.வி.மகேஷ், இன்ஸ்பெக்டர்கள் சங்கரய்யா, சீனிவாசலு,  ஆகியோர் ஆய்வு செய்தனர். சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். கொலை செய்த பிரசாத் அவரது பெற்றோரை கைது செய்து   விசாரித்து  வருவதாக போலீசார் தெரிவித்தனர்.