நாக தோஷம் போக்க மகளை கொன்று நரபலி கொடுத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி
நாக தோஷம் போக்க மகளை கொன்று நரபலி கொடுத்த தாய்க்கு மரண தண்டனை விதித்து சூர்யாபேட்டை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் மேகலபதி தாண்டாவை சேர்ந்த பானோத்து பாரதி என்கிற லாஸ்யா (32)- கிருஷ்ணா தம்பதிக்கு 7 வயதில் மகள் இருந்தார். லாஸ்யா மூடநம்பிக்கை மீது அதிதி நம்பிக்கை கொண்டு அவ்வப்போது பூஜைகளை செய்து வருவார். இந்த நிலையில் 2021 ஆண்டில் லாஸ்யாவிற்கு நாகதோஷம் இருப்பதாகவும் எனவே அதனை போக்க தனது 7 வயது மகளை கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாகக் கொலை செய்து நரபலி கொடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய மோட் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் (இப்போது முனகலா சப்-இன்ஸ்பெக்டர்) புகாரைப் பெற்றவுடன் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, வழக்கு அப்போதைய முனகலா சி.ஐ. ஆஞ்சநேயலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்களும் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன. சாட்சியங்களை பரிசீலித்த சூர்யாபேட்டை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சியாமஸ்ரீ மரண தண்டனை விதித்தார். வழக்கு விசாரணையில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட பாரதி, தனது கணவரைக் கொலை செய்ய முயன்றார். அந்த வழக்கிலும், ஹுசூர்நகர் துணை நீதிமன்றம் லாஸ்யாவிற்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்தது. இந்த நவீன யுகத்தில் மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. நரசிம்மா தெரிவித்தார்.