உலக கோப்பையுடன் வான்கடே நோக்கி பிரம்மாண்ட பேரணி!!

 
tt

டெல்லியில் டி20 உலக கோப்பையை பிரதமர் மோடியிடம் கொடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து பெற்றனர் உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி அவர்களுக்கு விருந்தளித்து வருகிறார். 

tt

டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டு மாலை 5 மணிக்கு வெற்றி பேரணி நடைபெற இருக்கிறது.  2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பொழுது தோனி தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் கோப்பை எடுத்துச் சென்று வான்கடே மைதானத்தில் வெற்றி விழா கொண்டாடினார்கள்.அதேபோன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.5 மணிக்கு மும்பையில் இருக்கும் மரைன் பகுதியில் தொடங்கும் இந்த பேரணி வான்கடே மைதானம் வரை கிட்டதட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற இருக்கிறது. இதையடுத்து நடைபெறும் பாராட்டு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரூபாய் 125 கோடி பரிசுத்தொகை  வழங்கப்படுகிறது.