“ஒரு நபர் நாளொன்றுக்கு எவ்வளவு எண்ணெய் உட்கொள்ள வேண்டும்?”- FSSAI வெளியிட்ட பகீர் தகவல்
ஒரு நபர் நாளொன்றுக்கு 20 முதல் 30 கிராம் வரை மட்டுமே எண்ணெய் உட்கொள்ள வேண்டும் என மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சமையல் எண்ணெயை சரியாகத் தேர்வு செய்து பயன்படுத்துவது, உங்கள் ஒட்டுமொத்த உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்கு 20-30 கிராம் சமையல் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த FSSAI பரிந்துரைத்துள்ளது. அதிக எண்ணெய் பயன்படுத்துவது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக எண்ணெய் பயன்படுத்துவதால் கலோரி உட்கொள்ளலும் அதிகரிக்கலாம். இதனால் இதயநோய் அபாயமும் அதிகரிக்கும். பொரிப்பதற்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். எண்ணெயை மீண்டும் சூடாக்கும்போது அதில் ஆபத்தான டிரான்ஸ் கொழுப்புகளும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களும் உருவாகின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உடல் எடை மேலாண்மைக்கு, சரியான அளவில் எண்ணெய் பயன்படுத்துவது அவசியம். சமைக்கும் முறையின் வெப்பநிலைக்கு ஏற்ப எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது அதன் ஊட்டச்சத்தைத் தக்கவைக்க உதவும் என மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

