காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

வெப் சீரிஸ் என்று கூறி இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், அந்தப் படங்களைத் தனியாக செல்போன் ஆப் (HotShots) ஒன்றை உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இப்புகாரி அடிப்படையில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை காவல் துறையினர் கைதுசெய்தனர். ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

இதுதொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குந்த்ராவுக்கு ஜாமின் வழங்கக் கோரி அவர் தரப்பு வழக்கறிஞர் சுபாஷ் யாதவ் வாதாடுகிறார். வழக்கு விசாரணையின்போது, ஜாதவ், “உண்மையான உடலுறவு சித்தரிப்பு மட்டுமே Porn (ஆபாசம்) என்றழைக்கப்படுகிறது. மற்ற அனைத்துமே மோசமான படைப்புகள்தான்” என்றார். அதாவது காமத்தைத் தூண்டக்கூடிய இலக்கியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளிட்டவற்றை அவர் மோசமானது என்று வாதாடியுள்ளார்.

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதே வேளையில் காமம் சார்ந்த படைப்புகளுக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் இரண்டும் ஒன்று என்ற முட்டுச்சந்துக்குள் அவரின் இவ்வாதம் நிறுத்தியுள்ளது. ஆபாச படங்களுக்கும் காமம் சார்ந்த படைப்புகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை நாம் காண்போம்.

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

ஆபாச படங்கள்:

ஆபாச படங்கள் (Pornography) பார்வையாளர்கள் மத்தியில் பாலியல் விருப்பத்தைத் தூண்டுவதே அதன் பிரதான நோக்கம். ஆக்ஸ்போர்டு அகராதியின் கூற்றுப்படி, ஆபாசமானது நிர்வாண நபர்களையும், பாலியல் செயல்களையும் விவரிக்கிறது. அதாவது உடலுறவை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது என்று சொல்கிறது. இது மக்களை பாலியல் ரீதியாக உற்சாகப்படுத்துவதாகவும், குறிப்பாக மக்களை பாலியல் குற்றம் இழைக்க தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

காமம் சார்ந்த படைப்புகள்:

காமம் சார்ந்த படைப்புகள் (Erotica) கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. இதுவும் மக்களைப் பாலியல் ரீதியாக தூண்டுகிறது. ஓவியம், சிற்பம், புகைப்படம் எடுத்தல், நாடகம், இசை, இலக்கியம் ஆகியவற்றில் இது அடங்கும். இது முழுக்க முழுக்க ஒரு தனிநபரின் கலைக் கண்ணோட்டமாகவே கருதப்படுகிறது. இதன் பிரதான நோக்கம் கலையைப் பாராட்டுவதே.

இந்தியாவில் ஆபாச படங்கள் தொடர்பாக என்னென்ன சட்டங்கள் கையாளப்படுகின்றன?

தகவல் தொழில்நுட்பம் (ஐடி) சட்டம் 2000, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம் 2012 ஆகிய மூன்று வகை சட்டங்கள் ஆபாசம் சார்ந்த படைப்புகளைக் கையாளுகின்றன.

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

ஐடி சட்டம் 2000 இன் பிரிவு 67 என்ன சொல்கிறது?

பார்வையாளர்களை தூண்டும் விதமாக பாலுறவு தொடர்பான ஆபாச காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் (ஆப், சமூக வலைதளங்கள், வெப்சைட்) வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும்போது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையோடு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையோடு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.