திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பல்!!

திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டு எச்சரித்துள்ளது.
திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்-ன் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு நேரத்தில் காலிங் பெல் அடித்தாலோ, வினோத சத்தம் கேட்டாலோ, தண்ணீர் குழாய் திறந்து தண்ணீர் வெளியேற்றுவது போன்று சத்தம் கேட்டாலோ வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
அவர்கள் கொலை செய்யவும் தயங்காத கும்பல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எளிதில் பிடிபடாமல் இருக்க ஜட்டி மட்டும் அணிந்து கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள் எனவும், ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வெளியூர் செல்லும் பொதுமக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.