ஆட்டோவில் தேன்கூடு - ஓட்டுநருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

 
tn

ஆட்டோவில் தேனீக்கள் கூடு கட்டியதால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் திகைத்து போய் நின்ற சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

tt

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோவை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு, சென்ற அவர் திரும்பி வந்து பார்க்கையில் அதிர்ச்சி காத்திருந்தது.


ஆட்டோவை நிறுத்தி சென்று திரும்ப வருவதற்குள் ஆட்டோவில் தேனீக்கள் கூட்டம் கூடு கட்டியிருந்தது. இதனால் அதிர்ந்து போன ஆட்டோ ஓட்டுநர் செய்வதறியாது திகைத்து போனார். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.