பசியின் கோரம்- சாலையில் இறந்து கிடந்த நாயின் இறைச்சியை சாப்பிட்ட இளைஞர்

 
s

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில், சாலையில் இறந்து கிடந்த நாயின் இறைச்சியை, ஒருவர் உண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பல்பூர் நகரின் புறநகர்ப் பகுதியான மனேஸ்வர் சௌக் அருகே, வெள்ளிக்கிழமை இரவு 9:10 மணி முதல் 9:15 மணிக்குள் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வீடியோவில் சாலை விபத்தில் உயிரிழந்த நாய் ஒன்றின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட பச்சையான இறைச்சியை இளைஞர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். 

நாயின் உடலுக்கு அருகில் அமர்ந்தவாறு இறைச்சியை உண்பதை கண்ட மக்கள் அவரை தடுக்க முயன்றும் முடியாத நிலையில், அவர் மனநலம் பாதித்தவர் என தெரியவந்துள்ளது. உடனடியாக போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று,  அந்த இளைஞரைக் கைதுசெய்ததுடன், சம்பவ இடத்திலிருந்து இறந்த நாயின் உடலையும் மீட்டது.  அந்த இளைஞன் முன்னதாக உணவு தேடி அருகிலுள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருக்கிறான். இருப்பினும், அவனுக்கு யாரும் உணவு தர மறுத்ததால் பசியில் இவ்வாறு செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.