பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

 
hmpv

பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சீனாவில் HMPV என்ற வைரஸ் பரவி வருகிறது. HMPV வைரஸ் என்றால் human metapneumo virus என்பது பொருளாகும். அதாவது மனித மெட்டாப் நிமோ வைரஸ். இது கொரோனாவை போன்று மூச்சுக்குழலை பாதிக்கும் வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என கூறப்படுகிறது. சீனாவின் வடக்கு பகுதியில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வைரஸ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருந்த போதிலும் இது சாதாரன வைரஸ் தான் எனவும், இது மழை மற்றும் குளிர்காலத்தில் வரக்கூடிய சாதாரண வைரஸ் காய்ச்சல் என சீனா உலக சுகாதார மையத்திடம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த குழந்தையின் பெற்றோர் இதுவரை சீனாவிற்கு செல்லாத நிலையில், அந்த குழந்தைக்கு எப்படி HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த குழந்தைக்கு கடந்த 02ம் தேதி பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தையிடம் எடுக்கப்பட்டுள்ள சோதனை மாதிரிகள் மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.