ராவணன், பாபர் போன்றோரால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை- யோகி ஆதித்யநாத்

 
y

ராவணன், பாபர், அவுரங்கசீப் போன்றோரால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

தமிழக அமைச்சரும், திமுக தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மத்தின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துவரும் நிலையில் , உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிகாரத்தின் ஒட்டுண்ணிகளால் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமியை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய யோதி ஆதித்யநாத், “சனாதன தர்மம் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது மனிதகுலத்திற்கு ஆபத்து. சனாதன தர்மத்தை இழிவாகப் பேசுவோர் தங்கள் செயல்களை பற்றி சிந்திக்க வேண்டும். ராவணன், பாபர், அவுரங்கசீப் போன்றோரால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை. சனாதன தர்மத்தை இந்த அற்ப ஒட்டுண்ணிகளால் எப்படி அழியும்? சனாதன் தர்மத்தை நோக்கி விரல்களை நீட்டுவது மனிதகுலத்தை சிக்கலில் தள்ளும் தீய முயற்சிக்கு சமம்” என்றார். 

Image

சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிலவற்றை  ஒழிக்க வேண்டும்,   எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார்.   இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.