சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற திறக்கப்படுவது எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்க ஒரு காரணம்.. அசாம் முதல்வர்

 
சாவர்க்கர்

வீர் சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் விழாவை எதிர்க்க அல்லது புறக்கணிக்க  மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம்  தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

இந்நிலையில் நேற்று தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா (யு.பி.டி.), திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற  கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக  அறிவித்துள்ளன. ஆனால், வீர் சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்க மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா சர்மா தெரிவித்தார்.

அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா மீது கொலை வழக்கு பதிவு!

இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: புதிய நாடாளுமன்ற கட்டுமானம் இவ்வளவு சீக்கிரம் முடிவடையும் என்ற அவர்கள் நினைக்கவில்லை. ஆக, எதிர்க்கட்சிகளுக்கு பவுன்சர் போல எல்லாமே நடந்துள்ளது. தங்கள் முகத்தை காப்பாற்றி கொள்ள புறக்கணிப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். வீர் சாவர்க்கர் தொடர்புடைய நாளில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்படும். அவர்கள் விழாவை புறக்கணிக்க அல்லது எதிர்க்க இது மற்றொரு காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.