காந்தி குடும்பம் அவர்களிடம் வாங்கிய நன்கொடைக்கான கடனை அடைக்க முயல்கிறது.. சீனாவை புகழ்ந்த ராகுலை தாக்கிய பா.ஜ.க.

 
அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா மீது கொலை வழக்கு பதிவு!

சீனாவை சீனாவை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டு, காந்தி குடும்பம் அவர்களிடம் (சீனா) வாங்கிய நன்கொடைக்கான கடனை அடைக்க முயல்கிறது என்று பா.ஜ.க.வின் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்து சில தினங்களுக்கு முன் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலில் விரிவுரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி,  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை குறிவைத்து கருத்துக்கள் தெரிவித்தாா மேலும் சீனாவை மிகவும் புகழ்ந்து பேசினார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. அசாம் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், முதலில் வெளிநாட்டு ஏஜெண்ட்கள் நம்மை குறிவைத்தார்கள், பிறகு நமது சொந்தம் நம்மை வெளிநாட்டில் நிலத்தில் குறிவைக்கிறார்கள். 

ராகுல் காந்தி

கேம்பிரிட்ஜில் மோடியை குறிவைக்கும் போர்வையில் வெளிநாட்டு மண்ணில் நமது நாட்டை இழிவுப்படுத்துமு் வெட்கக்கேடான முயற்சியே தவிர வேறில்லை. ராகுல் காந்தி சீனாவை ஒரு வல்லரசாக பாராட்டுகிறார், பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (பி.ஆர்.ஐ.) உதாரணமாக குறிப்பிடுகிறார். உண்மை என்னவென்றால், இன்று பல நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடிக்கு பி.ஆர்.ஐ. திட்டம் மட்டுமே பொறுப்பு. மாமா பிட்ரோடா இதை அவரிடம் சொல்லியிருக்க வேண்டும். அறிவுசார் சொத்துரிமைகளில் சீனா நம்பிக்கை கொள்ளாதது ஒரு ஆழமான மற்றும் சக்திவாய்ந்த கருத்து என்று ராகுல் காந்தி கூறுகிறார். 

சீனா

பதிப்புரிமை சட்டங்களை நிராகரிப்பதும், திருட்டை ஊக்குவிப்பதும் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று ப.சிதம்பரமும் நினைக்கிறாரா என்று கேட்க வேண்டும்?. ராகுல் சீனாவால் கவரப்பட்டதாகவும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தனது எண்ணங்களை வடிவமைத்தாகவும் ஒப்புக்கொள்கிறார். சீனர்களுக்கான இத்தகைய உயர்வான பாராட்டு புரிந்துகொள்ளத்தக்கது. காந்தி குடும்பம் அவர்களிடம் (சீனா) வாங்கிய நன்கொடைக்கான கடனை அடைக்க முயல்கிறது என தெரிவித்து இருந்தார்.