3 மாநில சட்டப்பேரவை தேர்தல் - மதியம் 1 மணி நிலவரம் இதோ!

 
election commision

3 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள்  வெளியாகி வருகின்றன. திரிபுரா , நாகாலாந்து மாநிலங்களில் ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

bjp

இதனிடையே 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரிபுராவில், பாஜக கூட்டணி 35 இடங்களிலும், சிபிஎம் 14 இடங்களிலும், திப்ரா கட்சி 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதேபோல் நாகலாந்து மாநிலத்தில், பாஜக கூட்டணி 33 இடங்களிலும், ஜனநாயக முற்போக்கு கூட்டணி 03 இடங்களிலும்,  நாகாம 02, மற்றவை 22 இடங்களிலும்இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி 28 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 06 இடங்களிலும், பாஜக 04 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.