ஆந்திராவில் கனமழை- பாலத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்த பேருந்து

 
ஆந்திராவில் கனமழை- பாலத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்த பேருந்து

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால்  பனகனப்பள்ளி மண்டலம் மிடுதூரிலும் குறுக்கே செல்லும் ஓடை ஆர்பரித்து வெள்ளநீர் செல்கிறது. 

Image

இந்நிலையில் அவ்வழியாக சென்ற கார் நீரில் சிக்கி கொண்ட நிலையில் அப்பகுதி மக்கள், டிராக்டர் மூலம் காரில் இருந்தவர்களை மீட்டு காப்பாற்றினர். இதனால் காரில் இருந்த இருவர் காயமின்றி உயிர் தப்பினர். இதேபோல் சஞ்சமலையில் பாலேறு ஆற்றில் மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாலேறு ஆற்று பாலத்தின் மேல் வெள்ளநீர் செல்கிறது. பாலத்தின் மேல் நான்கு அடி மேல் வெள்ளம் சென்ற நிலையில்  அதிகாலையில் திம்மனைபேட்டையில் இருந்து  கொண்டிருந்த கோயில்குண்ட்லா பணிமனையை  சேர்ந்த அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.  

Image

பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்த நிலையில் பாலத்தில் இருந்து பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. விபத்தை உணர்ந்த  பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை முன்னோக்கி செல்லாமல் நிறுத்தினார். பின்னர் பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினார். பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கியதால் அனைவரும்  நிம்மதி அடைந்தனர். பாலேறு ஆற்று பாலத்தில் தண்ணீர் நிறைந்து செல்வதால் சஞ்சமலை - திம்மனேனிப்பேட்டை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு  யாரும் ஆற்றை  கடந்து செல்லாத வகையில் தடுத்து வருகின்றனர். சஞ்சமாலா கிராமத்தைச் சேர்ந்த பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக சொந்த கிராமத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.